முத்துப்பேட்டையில் 21 வயது இளைஞர் பிணம் தூக்கில், கொலையா? – போலீஸ் விசாரணை!!

முத்துப்பேட்டையில், காயத்துடன் தூக்கில் 21 வயது இளைஞர் பிணம் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் பள்ளி பின்புறம், காமராஜர் காலனியை சேர்ந்தவர் பாபு, இவரின் மகன் ஆனஸ்ட்ராஜ் (வயது 21), பால் வியாபாரம் செய்துவந்தார். இந்நிலையில், நேற்று காலை பால் வாங்குவதற்காக அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆனஸ்ட்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். அவரின் காலில் காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை காவல்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனஸ்ட்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து, ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப் பட்டாரா? என பல்வேறு கோணங்களில் முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 வயது இளைஞர் திடீரென பிணமாக தொங்கியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.