முத்துப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி..!

முத்துப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தானங்களில் சிறந்த தானம் கண் தானம், என்பதை நினைவு கூறும் வகையில் முத்துப்பேட்டை நகரப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஜாம்புவானோடை, ஆலங்காடு, கல்லடிக்கொல்லை, அரமங்காடு, செங்காங்காடு, தில்லைவிளாகம், இடும்பாவனம், கோபாலசமுத்திரம் மற்றும் உப்பூர் ஆகிய பகுதிகளிலும் இந்த கண்தான விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.