முத்துப்பேட்டை பகுதியில் குப்பைகளை அகற்ற கோரி மாபெரும் முற்றுகை மற்றும் குப்பை கொட்டும் போராட்டம்..!

முத்துப்பேட்டை பகுதிகளில் குப்பைகளை அகற்றி, குப்பை தொட்டி அமைத்து தர வேண்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெற உள்ளது.

முத்துப்பேட்டை பகுதியில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளம், அதை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தொற்றுநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம். இதனை கருத்தில் கொண்டு காங்கிரஸ் விவசாய அணி சார்பில் மாபெரும் பேரூராட்சி முற்றுகை மற்றும் குப்பை கொட்டும் போராட்டமும் நடைபெற உள்ளது.

இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டி முத்துப்பேட்டை பகுதி முழுவதும் காங்கிரஸ் விவசாய அணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

முற்றுகைப் போராட்டம் குறித்த விவரம்;

நாள்: 10-10-2019

நேரம் : காலை 11 மணி

பேரணி புறப்படும் இடம்: முத்துப்பேட்டை பழைய பேரூந்து நிலையம்.