முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் குடிசை வீடு தீயில் எரிந்து 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்..!

முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் சக்தி என்பவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வருகிறார்.

அவரது வீட்டில் திடீரென்று நேற்று தீப்பற்றி எரிந்தது அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதன் காரணமாக வீடு முழுவதும் தீயிக்கு இரையானது. இறுதியில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்

வீட்டில் உள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.