முத்துப்பேட்டை அருகே மீனவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்..!

Fisher Man Died

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் பகுதியில் உள்ள அரமங்காடு கிராமத்தை சேர்ந்தவர் 48 வயதான மீனவர் வேதரத்தினம். இவர் நேற்று அதிகாலை முத்துப்பேட்டை கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு வலைவீசி மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அச்சமயம், எதிர்பாராதவிதமாக வேதரத்தினம் கடலில் மூழ்கியுள்ளார், இதனை அந்த வழியாக சென்று கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து, முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடலில் பிணமாக மிதந்த வேதரத்தினம் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.