முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு..!!

முத்துப்பேட்டையில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் மீட்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் வருவாய் துறை சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தாசில்தார் ராஜன் பாபு தலைமை தாங்கினார்.

இதில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், மேலும் புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, அதேபோல் மின் கசிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், மேலும் நம் வீட்டு பிள்ளைகள், வீட்டு விலங்குகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், என்பது பற்றிய தெளிவான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தண்ணீரில் சிக்கியவரை மீட்கும் ஒத்திகை

மேலும், அடுக்கு மாடிகளில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டாள் எப்படி காப்பாற்றுவது உட்பட அனைத்து நிகழ்வுகளும் தெளிவாக விளக்கப்பட்டன.

முத்துப்பேட்டை பொதுமக்கள் இந்த ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஆர்வமாக கண்டுகளித்தனர்.