முத்துப்பேட்டை கல்கேணித் தெருவில் வீட்டு வாசலில் துணிகர திருட்டு..!!

முத்துப்பேட்டை கல்கேணித் தெரு, லத்தீப் காலனியில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது. இவருடைய மோட்டார் பைக்கை மர்மநபர்கள் நேற்று திருடிச் சென்றதாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருடப்பட்ட மோட்டார் பைக்கின் மதிப்பு சுமார் 75 ஆயிரம் ஆகும். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் முத்துப்பேட்டை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கையும், திருடர்களையும் தேடி வருகின்றனர்.