முத்துப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு..!

முத்துப்பேட்டை அருகே சங்கேந்தி பகுதியில் லிசா என்ற 26 வயது பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

லிசாவின் மாமனார் மோட்டார் பழுது பார்த்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு லிசா வெளியே பதறிய படி வந்து மாமனாரை தூக்க முயன்ற போது, கீழே கிடந்த மின் ஒயரை மிதித்ததில் மின்சாரம் அவரை தூக்கி அடித்தது.

இதில் மயக்கமடைந்த அவரை அருகில் உள்ள எடையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அழைத்து வரும் வழியிலயே உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த லிசாவிற்கு 3 வயது ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.