முத்துப்பேட்டை பிரிலியண்ட் பள்ளியில் “மெளன அஞ்சலி”.!

Silent Tribute in Muthupettai Brilliant School

முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அவர்களின் நெருங்கிய நண்பரும், “ஆதியும் அந்தமும்” என்ற பள்ளி பாடலை எழுதியவரும், சோழநாடு துணியகத்தின் உரிமையாளருமான “சோழநாடு க.மு.நெயினார் முகம்மது” அவர்கள் சனிக்கிழமை இயற்கை எய்தினார்.

இந்நிலையில், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் மேலும் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்துபோன சுர்ஜித்திற்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் பள்ளியில் நேற்று(29/10/2019) வழிபாட்டு கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பள்ளி தாளாளர் அவர்களின் சீரிய இரங்கல் உரையுடன் இரங்கற்பா வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.

தகவல்: பிரிலியண்ட் நபில்