முத்துப்பேட்டை மஜிதியா தெருவில் நிலவும் அவல நிலை..!

முத்துப்பேட்டையில் காசிம் கொள்ளை முதல் மஜிதியா தெரு (வார்டு 9) வரை உள்ள பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால், இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் வசிப்பவர்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

‌‌மேலும், இப்பகுதியில் கழிவு நீர் வடிகால் குழாய்கள் ஒரு மாத காலமாக திறந்த நிலையில் கிடப்பதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக மட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர்களும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக, அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன, மேலும் மழை காலங்களில் சாக்கடை நீர் மழை நீருடன் கலந்து தரைக்கு மேல் ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் நிலவும் பிரச்சனைகளை சரி செய்து, கழிவுநீர் வடிகால் குழாய்களுக்கு நிரந்தர மூடி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.