முத்துப்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் ஆய்வு..!

முத்துப்பேட்டை பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முத்துப்பேட்டையில் உள்ள 18 வார்டுகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்கு பொதுமக்களிடம் காய்ச்சல் உள்ளதா? என கேட்டறிந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் தேவையற்ற பொருட்களை அகற்றவும் வலியுறுத்தி வருகின்றனர்.