முத்துப்பேட்டை பகுதியை சுகாதாரமான நகரமாக மாற்ற முடிவு..!

முத்துப்பேட்டை பேரூராட்சியில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நகரின் சுகாதாரம் காப்பது குறித்து, நேற்று பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் தேவராஜன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தககழகம் மற்றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதுகுறித்து செயல் அலுவலர் கூறுகையில் முத்துப்பேட்டையை, சுகாதாரமான நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் கடைகளில் சேரும் குப்பைகளை சாலையில் போடாமல் மக்கும், மக்கா என பிரித்து கடை வாசலில் வைத்தால் துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடைகளுக்கு வந்து குப்பைகளை பெற்றுக்கொள்வார்கள் என கூறினார்.மேலும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.