முத்துப்பேட்டையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போராட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பங்களாவாசல் முதல் பேட்டை வரையிலான சாலைபோடும் பணி துவங்கி, இதுவரை முடிக்காமல் அலட்சியம் காக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நூதன போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், 19-11-2019 அன்று காலை 10 மணி அளவில் பேட்டையிலிருந்து ஊர்வலமாக சென்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

மேலும், சாலைபோடும் பணியை தாமதிக்காமல் உடனடியாக முடிக்ககோரி, பேரூராட்சி அலுவலகம் முன்பு சமாது பூஜை நடத்தி, மாவட்ட ஆட்சியர் வரும்வரை காத்திருப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதில், அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அக்கட்சியினர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.