முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பாக மின்சார வாரிய அலுவலகத்தில் மனு…!

முத்துப்பேட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், மின்சார கணக்கெடுப்பாளர்கள் போதிய அளவில் இல்லாததால் முறையாக மின்அளவு கணக்கிட்டு செய்வதில்லை. இதனால் அதிக அளவு மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

‌எனவே, இதை சரிசெய்ய கோரி, முத்துப்பேட்டை SDPI கட்சி நகரத் தலைவர் அகமது பாட்ஷா தலைமையில், மற்றும் SDPI நகர நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து மின்சார வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.