முத்துப்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!

முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, இன்று அரிமா சங்கம் (LIONS CLUB) சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் குடித்து பயன்பெற்றனர்.