முத்துப்பேட்டை ECR சாலையில் இரண்டு லாரிகள் மோதி சாலை விபத்து…!

முத்துப்பேட்டை ECR சாலையில் கரூரில் இருந்து மணல் ஏற்றிவந்த லாரி ஒன்று, சாலையின் எதிரே மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநர், மாட்டின் மீது மோதாமல் இருக்க லாரியை வளைத்த போது, கட்டுப்பாட்டை இழந்து, நாகப்பட்டினத்திலிருந்து மீன் ஏற்றிவந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் முத்துப்பேட்டை ECR சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.