முத்துப்பேட்டையில் தொடரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி..!

முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு தடுப்பு பணியாளர்கள் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பொருள்களை கண்டறிந்து அவற்றை அகற்றியும், வீட்டில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் ஏதும் உள்ளதா என கேட்டறிந்து.? நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.