முத்துப்பேட்டை பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் – நடவடிக்கை எடுக்கப்படுமா.?

முத்துப்பேட்டையில் உள்ள தெருக்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நாய்களின் எண்ணிக்கையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும், இரவு நேரங்களில் தெருக்களில் தனியாக செல்பவர்களுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தெருக்களில் நாய்கள் குறைப்பதால் இரவில் பலரின் தூக்கமும் கெடுகிறது.

எனவே, இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது