முத்துப்பேட்டை செக்கடி குளம் உடையும் அபாயம்..!

முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சாலையை ஒட்டி அமைந்துள்ள செக்கடிகுளமானது தண்ணீர் நிறைந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செக்கடிகுளம் உடையும் நிலை ஏற்பட்டால் அதன் பின்புறம் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் தண்ணீர்புகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.