முத்துப்பேட்டை தொடர் கனமழை; 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம்..!

முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வாக உள்ள பல்வேறும் இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் முத்துப்பேட்டை தெற்குக்காடுவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45), பாண்டியன் (50), செம்படவன்காடுவை சேர்ந்த தேவி (40), முத்துப்பேட்டை மருதங்காவெளியை சேர்ந்த பழனிவேல் (55), முத்துப்பேட்டையை சேர்ந்த சரிபு சேக் அப்துல் காதர் ஆகிய 5 பேரின் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.