“ஒரு செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்” – அதிரடி சலுகை..!

முத்துப்பேட்டை அடுத்த பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு செல்போன் கடையில், ஸ்மார்ட் போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வெங்காயம் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கம் விலை போன்று வெங்காய விலையும் தினம் தினம் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.

வெங்காய விலை அதிகபட்சமாக கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்ட செல்போன் கடை ஒன்று, “ஒரு செல்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்” என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

செல்போன் கடைக்காரரின் இந்த சலுகை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.