சேதுபாவாசத்திரம் அருகே நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ECR சாலையில் இன்று காலை கேரளாவில் இருந்து வந்த கார் ஒன்று சென்று கொண்டிருக்கும்போது திடீரென காரின் டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார், எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த காரில் பயணித்த நால்வரும், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கேரளாவை சேர்ந்த ஸ்ருதி என்பவர் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னஷனீ என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகளும் தற்போது மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.