முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மீன்பிடி படகுகள் சேதம்.! – போலீசில் புகார்

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கோரையாற்று வழியாக சென்று மீன்பிடித்து விட்டு ஆசாத்நகர் பாலம் கீழே படகுகளை நிறுத்துவதும், அதேபோல் பேட்டை மற்றும் தெற்குதெரு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பேட்டை செக்போஸ்ட் அருகில் படகுகளை நிறுத்துவதும் வழக்கம்.

சிலநாட்களாக, செக்போஸ்ட் அருகே படகுகளை நிறுத்தும் மீனவர்கள் ஆசாத்நகர் பகுதியில் படகுகளை நிறுத்தியும், அப்பகுதியில் உள்ள படகுகளை சேதப்படுத்தி செல்வதும் வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று ஆசாத்நகர் பகுதி மீனவர்களின் படகுகளை கோயிலான் தோப்பு பகுதி மீனவர்கள் சேதமாக்கிவிட்டு
சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த ஆசாத்நகர் பகுதி மீனவர்கள், அப்பகுதி மீனவர் சங்கத் தலைவர் நிஜாம்மைதீன் அவர்களுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஷ் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.