முத்துப்பேட்டை தர்ஹா பகுதியினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு‌..?

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹாவில் வருகின்ற டிசம்பர் 27-ஆம் தேதி கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் அதேநாளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு தர்ஹா நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தர்ஹா அறங்காவலர் S.S பாக்கர்அலி சாகிப் அவர்கள் கூறியதாவது ;

ஜம்புவானோடை தர்காவில் கந்தூரி விழா நடைபெற நிலையில் அதே நாளில்
உள்ளாட்சித் தேர்தல் அறிவித்துள்ளதால் தர்ஹா பகுதியில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலை ஏற்படும்.

ஆகவே, இதனை அரசு கவனத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் வேறு தேதிக்கு தேர்தலை மாற்றித்தர வேண்டும் எனக் கூறினார். அப்படி இல்லையெனில் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளார்.