முத்துப்பேட்டை திமிலத் தெருவில் சூழ்ந்து நிற்கும் மழைநீர்..!

முத்துப்பேட்டை பேரூராட்சியின் 13 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி திமலத்தெரு,
இங்கு ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகி உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியபோதும் நடவடிக்கை எடுக்க முன்வராததால், மோட்டார் இயந்திரம் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் SDPI கட்சியினர் ஈடுபட்டனர், இருந்தும் தண்ணீரை பெரிய அளவில்
வெளியேற்ற முடியவில்லை.

தவ்ஹீத் மர்கஸ் அருகில் தேங்கி நிற்கும் மழைநீர்.

திமிலத்தெரு 1வது சந்து பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர்.

தற்போது வரையிலும் தேங்கி நிற்கும் மழைநீரால் இங்கு வசிப்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும்
அபாயம் உள்ளது.

எனவே இப்பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் கால தாமதப்படுத்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.