முத்துப்பேட்டையில் CAB மசோதாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆனால், இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சார்பில் நாளை
முத்துப்பேட்டையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.