முத்துப்பேட்டை பைபாஸ் ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு வருமா.?

முத்துப்பேட்டை பகுதியை ஒட்டியுள்ள கோவிலூர் பைபாஸ் ரவுண்டானமானது தெற்கில் முத்துப்பேட்டை, வடக்கில் மன்னார்குடி, மேற்கில் பட்டுக்கோட்டை, கிழக்கில் திருத்துறைப்பூண்டி என நான்கு சாலைகளை இனணக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

இந்த, பைபாஸ் ரவுண்டானாவின் நடுவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த வருடம் தாக்கிய கஜா புயலால் மின்விளக்கு முறிந்து விழுந்தது.

இதனைத்தொடர்ந்து, அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சுற்றுலாத்துறை கவனத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்றதை அடுத்து, அப்பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் 15 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

ஆனால், உயர்கோபுர விளக்கு அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளாதல், நான்கு சாலைகள் இணையும் ரவுண்டானாம் பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

எனவே, இதனனக் கருத்தில் கொண்டு
பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக உயர்கோபுர மின் விளக்கிற்க்கு மின் இணைப்பு கொடுத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.