முத்துப்பேட்டை ஒன்றிய கிராமம் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு..!

முத்துப்பேட்டை ஒன்றியம் இடும்பாவனம் சர்வமானிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சர்வமானிய கிராமத்தில் 40-திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், சுமார் 45 ஆண்டுகளாக சாலை சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நாங்கள் பலமுறை அரசியல் தலைவர்களை சந்தித்தும், அரசு அதிகாரிகளிடமும் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், நாங்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.