முத்துப்பேட்டை அருகே கஞ்சா விற்ற பெண் கைது..!

முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில், பெண் ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் உஷாதேவி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், அப்பகுதியை சேர்ந்த விஸ்வலிங்கம் மனனவி ராஜேஸ்வரி என்பவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது போது போலீசாரிடம் சிக்கினார்.

பின்னர், ராஜேஸ்வரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Source : Dinakaran