
முத்துப்பேட்டை பகுதியில் இன்று (26-12-2019) காலை சூரிய கிரகணம் தென்பட்டது.
வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்ற தொடங்கியது. 30 ஆண்டுகளுக்கு பிறகு நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.
இன்று நிகழும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.14-க்கு முடிகிறது. இந்த கிரகணம் கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், ஈரோடு என 9 மாவட்டங்களில் தெளிவாக தெரியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இதனையடுத்து, முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை சூரிய கிரகணம் வானில் தென்பட்டபோது சூரிய ஒளி மங்கி, மாலை நேரம் போல் காட்சி அளித்தது.