முத்துப்பேட்டையில் மூதாட்டியின் கோலப் போராட்டம்..!

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சில தினங்களாக பெண்கள் நூதனமாக வீட்டு வாசலில் கோலம்
போட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் பகுதியில் முல்லையம்பாள் (82) என்ற மூதாட்டி தனது வீட்டு வாசலில் இன்று காலை “NO CAA, NO NRC” என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு கோலமிட்டார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான
மூதாட்டியின் கோலம் அனைவரிடமும் வரவேற்பை பெற்று வருகிறது.

Source : Tamil Murasu.