பட்டுக்கோட்டையில் முழு கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

பட்டுக்கோட்டையில் முழு கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில்,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, பட்டுக்கோட்டையில் அனைத்து சமுதாய கூட்டமைப்புகள் சார்பில், நாளை (03-01-2020) முழு கடையடைப்பு மற்றும் மதியம் 2.00 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் அனைத்து சமுதாய கூட்டமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.