முத்துப்பேட்டையில் ஆளில்லா வீட்டில் புகுந்து கொள்ளை..!

முத்துப்பேட்டை அரபித் தெருவில் வசிப்பவர் ஆய்சா ஆம்மாள் இவர் தனது பிள்ளைகளோடு சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.‌ இவரது மகனின் ஒருவரான அன்சாரியின் மனைவி அய்னுல் பஜரியா என்பவர் வீட்டை பராமரித்து வருகிறார்.

இவர், கடந்த 5 நாட்களாக வீட்டில் லைட் போடுவதற்கு வரவில்லை இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அக்கம் பக்கத்தினர் துணையுடன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 6 பவுன் நகை, 80 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி, பித்தாளை பாத்திரங்கள் உட்பட பல்வேறு
பொருள்கள் திருட்டு போயிருந்தது
தெரியவந்தது.

இதனையடுத்து, முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கொள்ளை நடந்த வீட்டையும், உடைக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Source : Dinakaran.