நாச்சிக்குளத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டை அடுத்துள்ள நாச்சிக்குளத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில்,

மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தினை திரும்பபெறக் கோரியும், தமிழக அரசு இச்சட்டத்தினை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்பதை
வலியுறுத்தியும், நாளை (07-01-2020) மதியம் 3.00 மணியளவில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து தோழமை அரசியல் கட்சிகள் சார்பில், நாச்சிக்குளம் கடைத்தெரு அருகில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

மேலும், இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது