முத்துப்பேட்டை பேட்டை சாலையில் CAA எதிர்ப்பு வாசகங்கள்..!

முத்துப்பேட்டை பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலை
போடும் பணி சில நாட்களுக்கு முன் முடிவடைந்து, சாலையில் ஆங்காங்கே
வேகத்தடைகளும் அமைக்கப்பட்டது.

புதிதாக போடப்பட்ட பேட்டை சாலை.
வெள்ளை வர்ணம் பூசப்பாடமல் காணப்படும் வேகத்தடை.

மேலும், இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதிற்குப் பிறகு அதன் மீது வெள்ளை வர்ணம் பூச படாமல் இருந்துவந்தது.

இதனால், இப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், வாகன ஓட்டுநர்களும் வேகத்தடை இருப்பது தெரியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.


இந்நிலையில், இன்று (10-01-2020) முத்துப்பேட்டை மஜகவினர் சார்பில், பேட்டை சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக NO CAA, NO NRC, NO NPR போன்ற வாசகங்கள் எழுதப்பட்டது.