முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் விற்பனை..!

முத்துப்பேட்டையில் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது.

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் கொத்துகள்.
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கரும்புகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு கடைகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் வந்து வீட்டிற்கு தேவையான பொருள்கள், புதிய ஆடைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.