முத்துப்பேட்டையில் NTK சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

முத்துப்பேட்டையில் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக‌ போரட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும்‌ வேளையில்,

முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் வரும் (19.01.2020‌) ஞாயிறு மாலை 4.00 மணியளவில் பேரூராட்சி அலுவலகம் எதிரில், மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், தமிழக அரசு இந்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக்
கூடாது என்கிற கோரிக்கையை முன்வைத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.