முத்துப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்..!

முத்துப்பேட்டை பகுதியில், நாளை (19-01-2020) ஞாயிறுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை பிறந்த குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

உங்கள் அருகிலுள்ள பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், பாலர் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டாலும் மீண்டும் கொடுக்கலாம்.

போலியோ இல்லா உலகத்தை உருவாக்குவோம், இளம்பிள்ளை வாதம் நோயை முற்றிலும் ஒழிப்போம், இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.