முத்துப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு..!

இந்திய குடியுரிமை (திருத்த) சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை பகுதியிலும் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன.

முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில், முதற்கட்டமாக (20-12-2019) அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, (12-01-2020) அன்று மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்டமாக, கண்டன பொதுக்கூட்டத்தை அறிவிப்பு செய்துள்ளனர்.

முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் நடந்துமுடிந்த
ஆர்ப்பாட்டங்கள் இணைப்பு ;

1. முதற்கட்டமாக நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்.

2.இரண்டாம் கட்டமாக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.

இந்த நிலையில், மூன்றாம் கட்டமாக வருகின்ற (24-01-2020) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில், ஜாம்புவானோடை தர்ஹா முதன்மை அறங்காவலர் S.S பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த கண்டன பொதுகூட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டி, முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.