முத்துப்பேட்டையில் இரயில் நிலைய தரம் குறைப்பு எதிரொலி..

◾முத்துப்பேட்டை இரயில் நிலையம் மிக பழைமை வாய்ந்ததாகும். இது 100 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்த மிக பழைமையான இரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது..

◾இந்த இரயில் நிலத்தின் தகுதி குறைப்பு அறிந்த ஒன்று தான். நமது இரயில் நிலையத்தை மீண்டும் B grade ஆக மாற்ற வேண்டியும் அது சம்பந்தமான போராட்டம் பற்றியும் நம் தளதில் முன்பே பதிவிட்டு இருந்தோம்.

◾இதையடுத்து அனைத்து கட்சி கூட்டம் இந்த போராட்ட குழுவின் தலைவர் எஸ். எஸ். பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

◾இதில் முக்கிய போராட்டமாக ஜூன் 2 இல் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் முழுவதும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெறும் என்றும் மேலும் அன்றைய தினம் அடையாள உண்ணா விரதம் இருக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

◾இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்..