கல்லூரிகள் திறக்க போறாங்க..!! வாங்க ராக்கிங் எதிரான சட்டத்தை பற்றி தெரிஞ்சிக்க?

இது தமிழ்நாடு முழுவதும் பொருந்தும்.

◾19.12.1996 ஆம் நாளன்றே அமலுக்கு வந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

◾கேலிவதை (ராக்கிங்) என்றால், கல்வி நிலையத்தில் உள்ள எந்தவொரு மாணவருக்கும் எதிராக இரைச்சலுடன் கூடிய ஒழுங்கற்ற நடத்தையை வெளிப்படுத்துவது, மாணவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு கேடு அல்லது பயத்தை அல்லது அவமானத்தை அல்லது மனக்குழப்பத்தை உண்டாக்குவது, குறும்பு செய்து காயத்தை ஏற்படுத்துவது, புதிய மாணவர்களை கிண்டல் கேலி செய்து ஒரு செயலை செய்ய சொல்வது ஆகியவை ஆகும்.

◾பிரிவு 3 ன்படி கல்வி நிறுவனங்களின் உள்ளேயும், வெளியேயும் ராக்கிங் தடை செய்யப்பட்டுள்ளது.

◾பிரிவு 4 ன்படி ராக்கிங் செயலில் ஈடுபடுகிற அல்லது உடந்தையாக இருக்கிற அல்லது பரப்புகிற நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

◾பிரிவு 5 ன்படி ராக்கிங் செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மாணவரை கல்வி நிறுவனங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். மேலு‌ம் வேற எந்த கல்வி நிறுவனங்களிலும் அத்தகைய மாணவரை சேர்த்துக் கொள்ளக்கூடாது.

◾பிரிவு 6 ன்படி ராக்கிங் குற்றம் தொடர்பான புகார் வந்தால் கல்வி நிறுவனங்கள் அதை பற்றி உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். சம்பவம் உண்மை என்று தெரிய வந்தால் அதில் ஈடுபட்ட மாணவரை உடனடியாக தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்.

◾பிரிவு 7 ன்படி ராக்கிங் குற்றச்சாட்டு வந்தவுடன் கல்வி நிறுவனங்களின் முதல்வர் அல்லது தலைவர் அதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். தவறினால் அவரும் ராக்கிங்கிற்கு உடந்தையாக இருந்ததாக கருதி தண்டிக்கப்படுவார்..