கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு..

◾தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது.

◾இதற்கிடையே, வெயிலின் தாக்கத்தால் ஜூன் 1-ம் தேதிக்குப் பதில் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

◾இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 1-ம் தேதி (நாளை) பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளன்றே இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

◾9, 10-ம் வகுப்புகளுக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும் சீருடைகள் மாற்றப்பட்டிருப்பதால் அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் புதிய சீருடையில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.