பேரூராட்சியின் அலட்சியம்! பெரிய நோய் வரும் அபாயம்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ள நூராங்குண்டு (O.P.M தெரு) அருகில் பலபேர் தங்கள் குப்பைகளை தெருவில் கொட்டி வருகின்றனர். இது அந்த வழியில் செல்பவர்களுக்கு துர்நாற்றத்தையும், பல கொடிய வியாதிகளையும் உருவாக்கும் வண்ணம் உள்ளது. மேலும், பாதையும் மிகவும் மோசமாகவே இருக்கின்றது.

அங்கு வசிக்கும் குடும்பத்தினர் தங்கள் வீட்டு குப்பைகளை கொட்டுவதற்கு தனியே குப்பைத்தொட்டி வேண்டும் என்று பலமுறை பேரூராட்சியிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும், மலை காலத்தில் மிகவும் மோசமாக இந்த இடம் காணப்படுகிறது.

முத்துப்பேட்டையில் பல தெருக்களிலும் இதே நிலைமை தான். எத்தனை முறை சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மீதான போக்காக செயல்படுகிறது என்பதே இந்த தெருவில் வசிக்கும் மக்களின் கேள்வி?