குப்பை மேடாக மாறிவரும் முத்துப்பேட்டை நகர தெருக்கள்.. யார் காரணம்?

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி நகர தெருக்கள் பெரும்பாலும் ஆதரவற்று குப்பை மேடுகளாக மாறி மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் துர்நாற்றம் மற்றும் தொற்று நோய்களை பரப்பகூடியதாக இருந்து வருகிறது..

மேலே உள்ள படத்தில் காணப்படும் குப்பைமேடுகள் 16 வது வார்டு ராமஜெயம் மஹால் அருகில் உள்ள மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலை ஆகும். இது முத்துப்பேட்டை முக்கிய சாலைகளை இணைக்க கூடிய சாலை மேலும் இந்த பகுதியில் அதிகமான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இந்த சாலை பிரதான சாலையாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போது இந்த சாலை குப்பைகூலமுமாய் துர்நாற்றம் வீசும் வகையிலும், அந்த சாலையை பயன்படுத்துபவர்கள் இந்த சாலையை புறக்கணிக்க கூடிய வகையிலும் அமைந்துள்ளது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் அமைந்துள்ளதாகவும் காணப்படுகிறது.

யார் காரணம்???

◾குப்பை தொட்டி அங்கு அமைந்துள்ளது ஆனால் குப்பை வெளியில் கொட்டி கிடக்கிறது..??

◾குப்பை தொட்டியின் அளவு போதுமானதாக இல்லை??

◾மாடுகள் சாய்க்கும் வகையில் தொட்டிகள் அமைந்துள்ளது??

◾குப்பை தொட்டி பெரும்பாலும் நிறைவது இல்லை??

◾சரியான முறையில் குப்பைகள் அப்புறப்படுத்தபடுவது இல்லை??

◾குப்பைகள் பெரும்பாலும் குப்பைத்தொட்டியில் போடப்படுவது இல்லை??

தீர்வு..

◾குப்பையை மக்கள் ஆகிய நாம் முதலில் குப்பை தொட்டியில் போட வேண்டும்.

◾குப்பைகளை பெரிய பாலிதீன் பைகளில் கட்டி போட வேண்டும். ஏனென்றால் குப்பைகள் சிதறுவதை தவிர்க்கலாம்.

◾குப்பை தொட்டியின் அளவு பெரிய அளவில் வைக்கப்பட வேண்டும்.

◾குப்பை தொட்டி அசையாத வண்ணம் இருக்க வேண்டும். ஆடு மாடுகளுக்கு எட்டாத வண்ணம் அமைக்க வேண்டும்.

◾முக்கியமாக உடையாத வண்ணம் அமைக்கபட வேண்டும்.

◾குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்தி நோய் ஏற்படும் அபாயம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்..

மாற்றம் என்பது நம்மில் இருந்து தொடங்க வேண்டும்..

சுத்தமான சுகாதாரமான முத்துப்பேட்டையை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்..

இவன்..

Muthupet.in அட்மின் குழு